இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 மே, 2014

பற்பாடகம்

உடல் குளிர்ந்து சமநிலை பெற பற்பாடகம்


மருத்துவக் குணங்கள்
பற்பாடகம் என்பதும் மூலிகையே. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நன்றாக சுத்தி செய்து அல்லது தண்ணீரில் நன்கு கழுகி கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி  இருவேளையும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதிமற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும். இதை பெரியவர்களும் சாப்பிட நோய்கள் குணமாகும்.

பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம்சூடு தணியும்.

இனம்தெரியாத எவ்வகைக் காய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்துதேக்கரண்டியளவு மிளகுசுக்குஅதிமதுரம்வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலைமாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.

தேவையான அளவு பற்பாடகத்துடன் சிறிது பச்சைப் பயிறும் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்துவர உடல் குளிர்ந்து சமநிலைக்கு வரும்.

கடுக்காய்

 இளைத்தஉடல் தேற, நரம்புகள் முறுக்கேற கடுக்காய்-Chebulic myrobalan

பொதுவான குணம்   

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமதுஉடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளிஅவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்லதிருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும்முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். 


ஒருவனுடைய உடல்மனம்ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மைசெய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். 


கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக்கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருதுஎன்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர்  Terminalia Chebula - Common Name: Chebulic myrobalan

மருத்துவக் குணங்கள்
 
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

திரிபலா என்பது கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள் இம்மருந்தினை காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

நூறு கிராம் கடுக்காய் சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலைஇரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். நரம்புகள் முறுக்கேறும்.

கடுக்காய்கொட்டைப்பாக்குபடிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள்.

பொடுதலை

வெள்ளைப் படுதல் குணமாக பொடுதலை - Phyla nodiflora Greene

வெள்ளைப் படுதல் குணமாக பொடுதலை - Phyla nodiflora Greene














பொதுவான குணம்: 


பொடுதலை  பலகிளைகளோடு, கணுக்களில்வேர்விட்டு தரையில் படரும்ஒரு மூலிகைஇந்த மருத்துவசெடியின் இலை 2 3.2சென்டிமீட்டர் நீளமும் 1 2சென்டிமீட்டர் அகலம் கொண்டது,நுனி வட்டமானது, ஓரங்கள்தீவிரமாக வெள்ளை முடிகள்கொண்டது போல இருக்கும். (சில இலைகளின் ஓரங்களில் இருப்பது போல்) கூரிய பற்கள் கொண்டதாக இருக்கும்.


வேறுபெயர்கள் 

ஆங்கிலப் பெயர் Phyla nodiflora Greene. Rich and Verbena nodiflora L.

மருத்துவக் குணங்கள்

இத்தாவரம் வயல் வரப்புகளிலும், காடுகளிலும் தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும்.
நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலைமாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகுசூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண் அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.

பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும்எத்தனை தைலங்கள் தேய்த்தாலும்குணமாகாது. பொடுதலை 150 கிராம்தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம்,வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒருலிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில்எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கிஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும்இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கிபுளிஉப்புமிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.

பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல்,வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும்.
இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத்துவையல் செய்து உண்டுவந்தால் உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி,கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.

வியாழன், 29 மே, 2014

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு!யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

எ ந்த மா த த் தி ல் பி ற ந்தா ல் என்ன பலன்



எ ந்த மா த த் தி ல்  பி ற ந்தா ல்  என்ன  பலன் :

"நந்திசர்  ஞான சூத்திரம்" எனும் நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து  அவரின் குணதியசதின் தன்மையினை பின் வருமாறு வரையறுத்திருக்கிறார் நந்திச சித்தர்:

1. சித்திரையில் பிறந்தவர்களுக்கு வித்தைகள் இலகுவில் பழிக்காது.
2. வைகாசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக வித்தைகள்    
    எல்லாம்  பழிக்கும்.
3. ஆனியில் பிறந்தவர்களுக்கு எல்லாம் நன்றாக கைகூடும்.
4. ஆடியில் பிறந்தவர்கள் எல்லாம் தரித்திரர்களவார்கள். .
5. ஆவணியில் பிறந்தவர்கள் கொபக்காரர்களவார்கள் .
6. புரட்டாசியில் பிறந்தவர்கள் ஞான யோகி ஆவார்கள் .
7. ஐப்பசியில் பிறந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.
8. கார்த்திகையில் பிறந்தவர்கள் ஐஸ்வரியங்கள் உடையவர்கள். 
9. மார்கழியில் பிறந்தவர்கள் ஆதிகாரத்தில் இருப்பார்கள்.
10. தை மாதத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள்.
11. மாசிமாதத்தில் பிறந்தவர்கள் மகர சித்தர்கள் ஆவார்கள்.
12. பங்குனியில் பிறந்தவர்கள் ஞானியவார்கள்.

என பன்னிரண்டு பேருக்கும் பலன்களை சொல்லிவிட்டேன். யாரும் இதை சொல்லமாட்டர்கள் . நான் என்ற ஆணவத்தை அடக்குபவர்கள் எல்லாம் சிவபதம் அடைவார்கள் என நந்திசர் கூறுகிறார் .

புதன், 21 மே, 2014

நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

ராசிகள்       நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்          - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி            - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்          - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்   - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய



நட்சத்திரங்கள்                                                                                  தெய்வம் 

 
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)        - சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்);          - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்                     - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு                                     - காளி, துர்க்கை 
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு                                     - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி                                       - சாஸ்தா 
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்                                      - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது                                                - வினாயகர் 
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி )                            - மகா லக்ஷ்மி

  நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி                  - ஸ்ரீ சரஸ்வதி தேவி 
பரணி                          - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை                 - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி                     - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்               - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை               - ஸ்ரீ சிவபெருமான் 
புனர்பூசம்                    - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 
பூசம்                             - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்                   - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 
மகம்                             - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்                              - ஸ்ரீ ஆண்டாள் தேவி 
உத்திரம்                        - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம்                      - ஸ்ரீ காயத்திரி தேவி 
சித்திரை                         - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
சுவாதி                            - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
விசாகம்                         - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம்                         - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் 
கேட்டை                        - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்                            - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்                          - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 
உத்திராடம்                    - ஸ்ரீ வினாயகப் பெருமான் 
திருவோணம்                - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்                       - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம்                             - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 
பூரட்டாதி                        - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) 
உத்திரட்டாதி                  - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி                              - ஸ்ரீ அரங்கநாதன்

செவ்வாய், 20 மே, 2014

உடல் எடையை குறைக்க வேண்டுமா?… 

ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.
எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை உள்ளது – அது தான் சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்திசாலித்தனமாக தவிர்க்க முடியும்.
வெள்ளை பீன்ஸ் சூப்
குறைவான சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சுவைமிக்க பானம் எடையையும் குறைக்கும். நல்ல சுவையும், எளிதில் தயாரிக்கக் கூடியதாகவம் மற்றும் நிறைய புரதங்களை கொண்டிருப்பதும் இந்த சூப்பின் சிறப்பாகும்.
ப்ராக்கோலி சூப்
உங்களுக்கு ப்ராக்கோலியை பிடிக்காவிட்டாலும் கூட, எடை குறைப்பில் அதன் பலன்கள் அபரிமிதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 100 கிராம் ப்ராக்கோலியில் 1.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய நார்ச்சத்தும், அவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.
பரங்கிக்காய் சூப்
பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் பானமாக இது உள்ளது.
வேகமாக எடையைக் குறைக்க உதவும் சூப்களில் ஒன்றான இதில், குறைவான அளவு சோடியமும், அதிக அளவு புரதங்களும் உள்ளன. 100 கிராம் பழுப்பு அரிசி சிக்கன் சூப்பில் 0.7 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.
உருளைக்கிழங்கு சூப்
இந்த சூப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், எடையையும் உங்களால் குறைக்க முடியும். இந்த பானத்துடன் பல்வகை தானியங்களையும் சேர்த்துக் கொண்டு, குறைவான கொழுப்புடைய பண்டமாக சாப்பிடலாம்.
கேரட் சூப்
சுவைமிக்க கேரட் சூப்பில் கொத்தமல்லியை போட்டு குடிக்கும் போது அது குறைவான சர்க்கரையை கொண்டிருக்கும். 100 கிராம் அளவிற்கு இந்த சூப் உணவை சாப்பிடுபவர்களுக்கு 1.2 கிராம் அளவிற்கே கொழுப்புச் சத்து கிடைக்கும்.
பட்டாணி சூப்
நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.
காளான் சூப்
100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பைத் தரும் குணம் கொண்ட காளான் சூப் எடையை குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய மிகச்சிறந்த சூப்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் திறமையுடன் குறைக்கிறது.
பருப்பு சூப்
மிகவும் ஆரோக்கியமானதாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியதாகவும் உள்ள பருப்பு சூப் நீங்கள் எடையைக் குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான சூப் ஆகும். 100 கிராமில் 0.8 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள உணவாக இது உள்ளது.
தக்காளி சூப்
எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.